அசுரன் படத்தில் வரும்
" எள்ளு வயல் "
கர்ணன் படத்தில் வரும்
" கண்டா வரச்சொல்லுங்க "
" என் பண்டாரத்தின் "
இப்ப சமீபத்தில் "என்ஜாய் என் சாமி "
இந்த பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் .... சிறு வயது மகள் கேட்டாள் "இது நல்லாவே இல்ல சொகமா இருக்குது" "இத போய் திருப்பி திருப்பி கேக்குற "..."என்னது இது"என்றாள்
இதுக்கு பேரு தான் மா ஒப்பாரி ...என்றேன் ...
"அப்படின்னா "என்றாள் அவள் ....
ஒப்பாரிகள் அற்ற ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ....என்னை அதிர்ச்சி அடைய வைத்தது
மனித இனத்தின் ஆகப்பெரும் கலைவடிவம் ஒப்பாரி ...
களங்கமில்லாத உள்ளத்திலிருந்து தான் நிஜமான ஒப்பாரிப் பிறக்கும் ..
அகந்தை கொண்ட மனிதர்களால் ஒரு போதும் பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்கவே முடியாது ..
தன்னிலை மறந்து ...தன் சோகத்தையும் ,பிரிவையும் பொதுவில் பங்கு வைக்கும் ஆத்ம நிர்வானம் தான் ஒப்பாரி
ஒப்பாரி ஒரு கலை வடிவம் மட்டுமல்ல ..அது காலக்கண்ணாடி...
ஒப்பாரி பாடல்களை நேரில் கேட்ட கடைசி தலைமுறையும் நாம்தான் ...
நவீனத்துவம் நம்மிடம் இருந்து நிறைய விஷயங்களை ...கபளீகரம் செய்கிறது ..அந்தப் பட்டியலில் இதோ ஒப்பாரியும் இணைகிறது ....
ஒப்பாரி என்கிற பறவை..சென்னை Housing boardகளில் மற்றும் கிராமங்களில் இருந்து பறக்க தொடங்கி விட்டதாகவே உணர்கிறேன்
குறைந்தபட்சம் அது ஒரு செவ்வியல் வடிவமாக... மேடைகளிலும், இனி சில சினிமா பாடல்களின் வழியே நம்மை வந்த அடையலாம் .....
சின்ன விசும்பல்களும்...சத்தமில்லாத அழுகைகளும் ...
பிரிவும், வெறுமையும் நிறைந்த மனங்களை ஆற்றுப்படுத்தி விட முடியுமா என்ன ..
ஒப்பாரி பாடல்கள் குறித்த சில சுவையான தகவல்களுக்கு
http://tthamizhelango.blogspot.com/2015/02/blog-post.html?m=1
அருமையான பதிவு
ReplyDelete