கடவுளின் தாய் யாரென்று தெரியுமா .... ஆயா /பாட்டி/அப்பத்தா/ ஆயி/ அம்மம்மா எப்படி கூப்பிட்டாலும் அவர்கள் கடவுளின் தாய் தான் ஆயாக்கள்...... வாழும் பிரமிடுகள் காய்ச்சல் நிறைந்த ஒரு மாலைப்பொழுதில் என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்று வேப்பிலை அடித்து விட்டாள் , அது பரவாயில்லை.... அந்த கடவுளின் தாய், கடவுளையே மிரட்டினார் " நெமிலி அம்மா என் குழந்தையை பார்த்துக்கோ.. இது மாதிரி பண்ணிக்கிட்டு இருந்த அப்புறம் உனக்கு அவ்வளவு தான் " என்றாள் .. நெமிலி அம்மா கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருப்பாள் பாட்டிகள் என்றைக்கும் தாத்தாக்களுக்கு பயந்தது இல்லை "அவர் கிடக்கிறார்" என்று அனாவசியமாக கடந்து செல்வார்கள் சென்னாகுன்னி குழம்பு, குடல் வறுவலும் என் பாட்டி மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்ப மெனுவில் இருந்து காணாமல் போனது பாட்டிகள் கடுமையான உழைப்பாளிகள் , அத்தனை உழைப்புக்கும் நடுவில் அவர்கள் மறக்காமல் ஊர்க்கதை பேசுவார்கள் " ஏண்டி இவளே" இப்படித்தான் ஆரம்பிப்பாள் எப்போதும் என் பாட்டி பாட்டிகளின் அறியாமையில் ஒரு அழகு இருந்தது "பாட்டி நலாவிற்கு (நிலா) ஆள் போய்ட்டா...
அசுரன் படத்தில் வரும் " எள்ளு வயல் " கர்ணன் படத்தில் வரும் " கண்டா வரச்சொல்லுங்க " " என் பண்டாரத்தின் " இப்ப சமீபத்தில் "என்ஜாய் என் சாமி " இந்த பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் .... சிறு வயது மகள் கேட்டாள் "இது நல்லாவே இல்ல சொகமா இருக்குது" "இத போய் திருப்பி திருப்பி கேக்குற "..."என்னது இது"என்றாள் இதுக்கு பேரு தான் மா ஒப்பாரி ...என்றேன் ... "அப்படின்னா "என்றாள் அவள் .... ஒப்பாரிகள் அற்ற ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ....என்னை அதிர்ச்சி அடைய வைத்தது மனித இனத்தின் ஆகப்பெரும் கலைவடிவம் ஒப்பாரி ... களங்கமில்லாத உள்ளத்திலிருந்து தான் நிஜமான ஒப்பாரிப் பிறக்கும் .. அகந்தை கொண்ட மனிதர்களால் ஒரு போதும் பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்கவே முடியாது .. தன்னிலை மறந்து ...தன் சோகத்தையும் ,பிரிவையும் பொதுவில் பங்கு வைக்கும் ஆத்ம நிர்வானம் தான் ஒப்பாரி ஒப்பாரி ஒரு கலை வடிவம் மட்டுமல்ல ..அது காலக்கண்ணாடி... ஒப்பாரி பாடல்களை நேரில் கேட்ட கடைசி தலைமுறையும் நாம்தான் ... நவீனத்துவம் ...